நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

இதில் இணைச் செயலாளர் செல்வகுமார், துணைத் தலைவர்கள் அன்பரசன், தனசேகரன், போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும்.

சரியான எடையில் வழங்காமல் ஆய்வு செய்யப்படுவதை தவிர்க்கப்பட வேண்டும். பணி வரன்முறைப்படுத்தாத பணியில் இருக்கும்போது இறந்த ரேஷன் கடை பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கி காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அனைத்து வகை நோய்களுக்கும் அனைத்து வகை மருத்துவ மனைகளிலும் மருத்துவம் பார்ப்பதற்கு காப்பீடு திட்டத்தை விரிவு படுத்த வேண்டும். நியாய விலை கடை பணியாளர்களுக்கு மாத இறுதியில் ஊதியம் வழங்குவதற்கு ஏதுவாக மற்ற துறைகளுக்கு நிதி ஒதுங்குவது போல் தனி நிதி ஒதுக்கி தனி கணக்கு பராமரிக்கப்பட்டு ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து பண பயன்களும் ஏ.டி.எம். மூலம் வழங்கப்பட வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.




Next Story