சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேரன்மாதேவியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ஜெசிந்தா ராணி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் அமுதவள்ளி முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சொர்ணம் சிறப்புரையாற்றினார். ஒன்றிய பொருளாளர் கணேஷ் ராணி நன்றி கூறினார். காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். காலமுறை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சேரன்மாதேவி வட்டார பகுதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story