சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தியாகதுருகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் மனோன்மணி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்கள் ரஜீதா, மாவட்ட துணைத் தலைவர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் முத்துலட்சுமி வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு, மாவட்ட செயலாளர் சந்திரசேகர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்குவதை சத்துணவு அமைப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் வட்டார இணை செயலாளர்கள் புஷ்பா, பூங்கொடி, வட்டார துணைத் தலைவர் அமுதலட்சுமி, முன்னாள் மாவட்ட இணை செயலாளர் மீனாட்சி, வட்டார துணை செயலாளர் சரவணன் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் அமைப்பாளர் சகுந்தலா நன்றி கூறினார்.


Next Story