சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பியுலா எலிசபெத்ராணி தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகி அகிலா மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வித்தியாவதி வரவேற்றார்.
கோரிக்கை குறித்து திருப்பத்தூர் மாவட்ட தலைவர் சேகரன் பேசினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பூசாமி, தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து துறை மாநில செயலாளர் ராஜாமணி உள்பட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். சங்க மாநில செயலாளர் ரவி உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்த வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.