சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

தேர்தல் கால வாக்குறுதியில் முதல்-அமைச்சர் கூறியவாறு சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை நீக்கி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும். பணிக்கொடையாக ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு, அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கிட வேண்டும். சத்துணவு திட்டத்தில் இருக்கின்ற காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு மையங்களின் மூலமாகவும், சத்துணவு ஊழியர்களை கொண்டும் அமல்படுத்திட வேண்டும். 10, 20, 30 வருடங்கள் பணி முடித்த சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு தேக்கநிலை ஊதியம் வழங்கிட வேண்டும்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பத்தாண்டு பணி முடித்த உதவியாளர்களுக்கும், ஐந்தாண்டு பணி முடித்த சமையலர்களுக்கும் அமைப்பாளர் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தாந்தோணி ஒன்றிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் பொன்.ஜெயராம் சிறப்புரையாற்றினார். இதில் ஒன்றிய செயலாளர் பிலோமினா, துணை செயலாளர் நீலாவதி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story