சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கவிதா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரேணுகா வரவேற்றார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் கலைச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மகளிர் சுய உதவி குழுவினர் மூலம் தயாரிக்கப்படும் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை கைவிட்டு சத்துணவு ஊழியர்கள் மூலம் அந்த திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளித்து பிற துறைகளில் பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story