சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் பழனி, அன்பழகன், ஏழுமலை, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சேகர் வரவேற்றார். மாவட்ட செயலாளர் விஜயா கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இதில் காலமுரை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும். ஆறு மாதமாக வழங்காமல் உள்ள மானிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர்கள் லட்சுமி, வெங்கடேசன், கார்த்திகேயன், எல்லம்மாள், மாநில செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மீனாட்சி நன்றி கூறினார்.


Next Story