சீமானை கண்டித்து நரிக்குறவர்-குருவிக்காரர்கள் ஆர்ப்பாட்டம்


சீமானை கண்டித்து நரிக்குறவர்-குருவிக்காரர்கள் ஆர்ப்பாட்டம்
x

சீமானை கண்டித்து நரிக்குறவர்-குருவிக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு நரிக்குறவர், குருவிக்காரர் நல பேரமைப்பினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், ராஜசேகரன், செல்வகுமார் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நரிக்குறவர், குருவிக்காரர் பழங்குடி சமூகத்தை தொடர்ந்து இழிவாக பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசாரும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் சமீபத்தில் பழங்குடியினர் பட்டியலில் இணைந்துள்ள எங்கள் சமூக மக்கள் அனைவருக்கும் சாதி சான்றிதழ்கள் விரைந்து வழங்கி, கல்வி, பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பு அளித்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அறிவிப்புகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அனைவருக்கும் தீண்டாமை பெருங்குற்றம் விழிப்புணர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். முன்னதாக அவர்கள் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story