அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார கிளைத்தலைவர் முனியாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வைரவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும். 70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10 சதவீதம், 80 வயது நிறைந்தவர்களுக்கு மேலும் 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். நிர்வாக தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல தாலுகா அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
Related Tags :
Next Story