அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் போராடிய தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினரை கைது செய்ததை கண்டித்து ஊட்டியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

ஊட்டி: தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் போராடிய தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினரை கைது செய்ததை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் அய்யனார் தலைமை தாங்கினார். செயலாளர் ஆனந்தன், செவிலியர் சங்க மாவட்ட தலைவர் பிரவீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கைது செய்யப்பட்ட செவிலியர்களை உடனடியாக விடுதலை செய்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்க்க வேண்டும் என்றனர்.


Next Story