அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2023 1:15 AM IST (Updated: 18 Oct 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தில் அரசின் வரவு-செலவு, அரசு ஊழியர்களின் விவரங்களை கணினிமயமாக்கல் செய்வது என்ற பெயரில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்த திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் தாஜுதீன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story