அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறைகளை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்டத் தலைவர் ராணி, போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளன மண்டல பொதுச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். இதேபோல் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருமருகல் ஆகிய பகுதிகளில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story