அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்க பொறுப்பாளர் சிவகுருநாதன் வரவேற்று பேசினார். மாவட்ட துணை தலைவர் ராஜவேம்பு தலைமை தாங்கி, கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பல்வேறு பொறுப்பாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு அரசு ஊழியர்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. நிதிநிலையை காரணம் காட்டி அரசு ஊழியர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்து வருகிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர் பாஸ்கர் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய ஊழியர்கள், சத்துணவு திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.