அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கடலூர்

கடலூர்

பணி நிரந்தரம்

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். 1.1.2023 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் தொகுப்பூதிய ஊழியர்களை நிரந்தரப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் அறிவித்து இருந்தது.

அரசு தொழிற்பயிற்சி நிலையம்

அதன்படி கடலூர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தொழிற்பயிற்சி நிலைய சங்கம் பாலமுருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் பூபாலன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், ஓய்வூதியர் சங்க மாவட்ட துணை தலைவர் கருணாகரன், கூட்டுறவுத்துறை மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை ராமர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகி வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைவர் இமானுவேல் நன்றி கூறினார். இதேபோல் கடலூர் தொழிலாளர் நலத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல் பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story