விருத்தாசலத்தில்அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விருத்தாசலத்தில்அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

மத்திய அரசு வழங்கியதுபோல் 1.1.2023 முதல் 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் நாட்டுதுரை தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணைத்தலைவர் ஆனந்தகுமார், வட்ட நிர்வாகிகள் ஹரிஹர சுப்பிரமணியன், ஜோசப், பாக்கியலட்சுமி, இலக்கியா, பிரபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சங்க கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story