இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
x

குடியாத்தத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர்

ஆரணியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதாக ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்து முன்னணியின் வேலூர் கோட்டத் தலைவர் மகேசை கைது செய்தனர். அதேபோல் செய்யாறில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்து முன்னணி மாநில செயலாளர் மணலி மனோகரனை கைது செய்தனர்.

இதனை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.கார்த்திக், யுவன்சங்கர், இந்து இளைஞர் முன்னணி மாவட்ட இணை அமைப்பாளர் அனிஷ், ஒன்றிய தலைவர் ஆறுமுகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story