அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் 25 ஆண்டுகளாக பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, கவுரவ விரிவுரையாளர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அந்த மாநிலம் முதல்-மந்திரிகள் அறிவித்துள்ளனர். அதேபோல் தமிழகத்திலும், குறிப்பாக தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிதாக அறிவித்துள்ள போட்டி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். நேற்று 2-வது நாளாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story