இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நேற்று காலை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.கே.சரவணன் தலைமை தாங்கினார். தலைவர் சக்திவேல், பொருளாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியாளர்களை குறைத்தும், தனியார் மூலம் பணியாளர்களை ஒப்பந்தம் செய்யும் அரசாணை 152 மற்றும் அரசாணை 115-ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், மாநகராட்சி, நகராட்சி உரிமையை தனியாரிடம் கொடுப்பதும், 35 ஆயிரம் பணியிடங்களை 3 ஆயிரத்து 417 ஆக குறைப்பதை கண்டித்தும், வரும் காலங்களில் அரசு துறைகளில் பணி நிரந்தரம் இல்லை என்ற நிலையை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கைகள் தொடர்பாக மனு ஒன்றினை அளித்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story