இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்

மத்திய அரசு குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதம் உயர்த்திட வேண்டும். எல்.ஐ.சி. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். என்.பி.எஸ். திட்டத்தில் நிர்வாகத்தின் பங்களிப்பை 14 சதவீதமாக உயர்த்திட வேண்டும். ஊழியர்களுக்கு எதிரான என்.பி.எஸ். திட்டத்தை கைவிட வேண்டும். எல்.ஐ.சி. காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். விடுப்பு சம்பந்தமான முடிவுகளை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு பிரிமீயத்திற்கான ஜி.எஸ்.டி.யை உடனடியாக நீக்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், எல்.ஐ.சி. முதல்நிலை அதிகாரிகள் சங்கம் மற்றும் அகில இந்திய பென்சனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க துணைத்தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். முதல்நிலை அதிகாரிகள் கூட்டமைப்பு நிர்வாகி முருகன், ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி சுப்பிரமணி, கிளை தலைவர் முத்துக்குமார், செயலாளர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story