இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்

சிதம்பரம்,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகளில் நேற்று முன்தினம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் (தேசிய புலனாய்வு முகமை) சோதனை மேற்கொண்டு, 106 பேரை கைது செய்தனர். இதை கண்டித்து சிதம்பரத்தில் நேற்று அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் லப்பை தெரு பள்ளிவாசல் தலைவர் ஹெலீம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈக்தா பள்ளிவாசல் தலைவர் ஜாகிர் உசேன், சிதம்பரம் ஐக்கிய ஜமாத் தலைவர் செல்லப்பா என்கிற முகமது ஜியாவுதீன், சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் மக்ருதீன், சிதம்பரம் நகர மன்ற உறுப்பினர் தில்லை ஆர்.மக்கீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் பள்ளிவாசல் தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


Next Story