நாமக்கல்லில் நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
நாமக்கல்

கடலூர் மாவட்டத்தில் காடாம்புலியூர் குறுவட்ட நில அளவையாளர் முருகேசன் தாக்கப்பட்டதை கண்டித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இணை செயலாளர் சுபாஷ் வெங்கடேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

அதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் காடாம்புலியூரில் குறுவட்ட அளவர் மகேஸ்வரன் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், அவரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனிடையே மகேஸ்வரனை போலீசார் முன்னிலையில் அரசியல் கட்சி பிரமுகர் தாக்கியும், போலீசார் துரித நடவடிக்கை மேற்கொள்ளாதது வருத்தம் அளிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். முடிவில் சங்க நிர்வாகி ராஜா நன்றி கூறினார்.


Next Story