26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திநில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாநில செயலாளர் மகாதேவன், மாநில துணைத்தலைவர் முத்து, தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜிலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும், களப்பணியாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட வேண்டும், நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் ராஜேஷ், மாவட்ட நிர்வாகிகள் தங்கராஜ், ஹரிபிரசாத், ரங்கநாதன், சையத்அஹமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.