தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

நாங்குனேரி சம்பவத்தை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

வேலூர், திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்குழு சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். செயலாளர் குபேந்திரன், சிறுபான்மை நலக்குழு வேலூர் மாவட்ட செயலாளர் கதிர் அகமது, மலைவாழ் மக்கள் சங்கம் வேலூர் மாவட்ட செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேலூர் மாவட்ட செயலாளர் தயாநிதி, சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பரசுராமன், வேலூர் மாநகர தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவனுடைய சகோதரி மீது சகமாணவர்கள் நிகழ்த்திய சாதிய வன்கொடுமையை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவன் குடும்பத்திற்கு நீதியும், நிவாரணமும் விரைந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story