மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தஞ்சையில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தனசீலி, துணை செயலாளர் எஸ்தர் ஜெயலீமா, பொருளாளர் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மல்லிகா, சிவகாமி, ஜானகி, முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளை நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரியும், நன்னடத்தை விதிகளை மீறிய குஜராத் அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாதர் சங்க நிர்வாகிகள் பலர், வாயில் கருப்பு துணி கட்டி இருந்தனர்.


Next Story