திருக்கோவிலூரில்ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருக்கோவிலூரில்ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:46 PM GMT)

திருக்கோவிலூரில் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாட்டில் குறைந்த ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்கள், சமூக வன காவலர்கள், கிராமப்புற நூலகர்கள், நெடுஞ்சாலை துறை தொகுப்பு ஊதிய பணியாளர்கள், மற்றும் பட்டு வளர்ச்சி துறை தினக்கூலி ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள சார்நிலைக் கருவூலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். வட்ட துணைத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, சம்பத், பாலசுந்தரம், வட்ட இணை செயலாளர்கள் அய்யாசாமி, திருவாணன், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீராசாமி வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, வட்ட செயலாளர் பழனிசாமி, போக்குவரத்து துறை ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் ஜே.ஆபிரகாம், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் துணைத் தலைவர் அம்பாயிரம், சத்துணவு ஊழியர் சங்க அமைப்பாளர் ஹரிதாஸ் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினார்கள். முடிவில் வட்ட பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


Next Story