ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீதிமன்ற உத்தரவின்படி 5.11.2022-ல் அகவிலைப்படியை இணைத்து பென்ஷன் வழங்காததை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சம்மந்தம் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சகாதேவன் தொடக்க உரையாற்றினார். வேலூர் மண்டல செயலாளர் கோவிந்தசாமி, திருவண்ணாமலை மண்டல செயலாளர் லட்சுமி நாராயணன், விழுப்புரம் மண்டல செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர், கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.

இதில் நிர்வாகிகள் இமயவர்மன், பலராமன், பக்தவச்சலம், சுந்தரம், பழமலை, கலியமூர்த்தி, ராஜாராம், பாலசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் சின்னராசு நன்றி கூறினார்.


Next Story