ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை
மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதியை குறைத்து உள்ளது. இதனை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாசானம் தலைமை தாங்கினார். முத்துராஜ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்து பேசும்போது, கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை 33 சதவீதம் குறைத்து ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இது கிராமப்புற மக்களை வஞ்சிக்கும் செயலாக உள்ளது. எனவே இந்த திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றார். முடிவில் விஜயகுமார் நன்றி கூறினார்.