ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஆலங்குளத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தென்காசி மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பழனி முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறையில் முறையான திட்டமிடல் இன்றி பணிகளை நடைமுறைப்படுத்தி திட்டங்களை பாழ்படுத்தும் அதிகாரிகளை கட்டுப்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கங்காதரன், மாவட்ட செயலாளர் துரை டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story