ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஆரணியில் 2 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன்பாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் 2 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன்பாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நரிக்குடி ஊராட்சி ஒன்றிய பொறியாளர் பணியிலிருந்து விடுவிப்பு செய்தமையை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக் கிளை தலைவர் மு.தென்னரசு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.இதே போன்று மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக மாவட்ட இணைச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, பிரபாகரன், திலகவதி, மிர்ணாளினி மற்றும் கிளை பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Next Story