கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் திருச்சி கோட்டம் சார்பில் அரியலூர்-திருச்சி சாலையில் உள்ள தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி பென்ஷன் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் புதிதாக பணியில் சேர்ந்திடும் ஊழியர்களுக்கு 2-ம்கட்ட டி.ஆர்.சி.ஏ. வழங்க வேண்டும். பணியின் போது உயிரிழந்த ஜி.டி.எஸ். ஊழியர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினர்.


Next Story