விருத்தாசலத்தில் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விருத்தாசலத்தில்   தமிழ் தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2023 12:15 AM IST (Updated: 19 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் தமிழ் தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்


விருத்தாசலம்,

தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்து விட வேண்டும். குறுவை சாகுபடி இழப்பிற்கு இழப்பீடு வழங்க வேண்டும். நெய்வேலி, கூடங்குளத்தில் இருந்து கர்நாடகா செல்லும் மின்சாரத்தை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு துணைத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். தமிழ் தேசிய பேரியக்க பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் குபேரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில் நல்லூர் ஒன்றிய செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.


Next Story