விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
காரையூரில் உள்ள ஒலியமங்கலத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய துணைத்தலைவர் ராசு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி, ஊதியத்தை ரூ.600 ஆக வழங்க வேண்டும். பா.ஜனதா அறிமுகப்படுத்திய ஆன்லைன் வருகைப்பதிவேடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story