சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இணை செயலாளர் சாவித்திரி தலைமை தாங்கினார். கொரோனா தடுப்பு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்த முன்கள பணியாளர்களான சுகாதார செவிலியர்களுக்கு விடுபட்ட ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அஞ்சலை, மாவட்ட செயலாளர் பிரேமா உள்பட சங்கத்தை சேர்ந்த செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story