தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலர் செல்வம் தலைமை தாங்கினார். ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் தங்கசேகர் முன்னிலை வகித்தார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைப்பொதுச்செயலர் கமலநாதன், மாவட்ட செயலர் கணேசன், மாவட்ட அமைப்பாளர் மணிமாறன், வட்டாரத்தலைவர் ஜெயமூர்த்தி உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், இ.எம்.ஐ.எஸ். பதிவேற்றும் செய்யும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்களை 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட செயலர் விஜயகுமார் நன்றி கூறினார். இதில் திரளான ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.






