பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெரம்பலூர் மாவட்ட அகவொளி திறனாளர் நலச்சங்கத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நேற்று கலெக்டரிடம் மனு அளிக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அற்புதம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான நாங்கள் செய்து வந்த அனைத்து கைத் தொழில்களும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முடங்கி போயின. எனவே தங்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் விதமாக கோவில்களிலும், நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வணிக வளாகங்களிலும் இலவசமாக கடை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களில் சிலர் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story