கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர்
மணல் கடத்தலை தடுத்த தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி சட்டம் இயற்றிடக்கோரியும் நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் மங்கையர்கரசி உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story