கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்

புகழூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். இதில், புகழூர் தாலுகாவிற்குட்பட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரத்து 700 வழங்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story