மகளிர் மேம்பாட்டு நிறுவன ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மகளிர் மேம்பாட்டு நிறுவன ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM (Updated: 10 Oct 2023 6:46 PM)
t-max-icont-min-icon

நாகையில் மகளிர் மேம்பாட்டு நிறுவன ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மீரா, மாவட்ட பொருளாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன ஊழியர்களை பல்வேறு காரணம் காட்டி வேலையை விட்டு நிறுத்தக்கூடாது. ஊதியத்தை உயர்த்தி மாதம் 5-ந்தேதிக்குள் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் துணைத் தலைவர்கள் ரோஸ்லின் மேரி, ஹேமாவதி, மாரியம்மாள், சந்திரா, மகேஷ்வரி, அஞ்சலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story