காவிரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காவிரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
காவிரி நீரை தமிழகத்திற்கு மத்திய அரசு பெற்று தர வேண்டும். நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பெனிடிக் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மண்டல செயலாளர் பெல்வின் ஜோ முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் விஜயராகவன், சீலன், கிம்லர், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
--
Related Tags :
Next Story






