மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு மீது பழிவாங்கும் நோக்கில் வங்கி கணக்கை முடக்கி உள்ள அமலாக்கத்துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் செய்யது அபுதாகீர் தலைமை தாங்கினார். செயலாளர் முகமது இக்பால் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் செல்லத்துரை, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமது இக்பால், தமிழ் புலிகள் கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குட்டி வெங்கடேசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அமலாக்க துறையையும், மத்திய அரசையும் கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story