ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொன்மலைப்பட்டி:
திருச்சி பொன்மலையில் ெரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு அப்ரண்டீஸ் மாணவர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பயிற்சி முடித்த அப்ரண்டீஸ் மாணவர்களுக்கு தென்னக ெரயில்வே வேலை வழங்கவில்லை என்று கூறி, பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுவரை வேலை வழங்காத தென்னக ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து நேற்று பொன்மலை ஆர்மரிகேட் ரெயில்வே பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்ரண்டீஸ் மாணவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாக வெளியிடப்பட்ட அறிக்கையை கண்டித்தும், அப்ரண்டீஸ் மாணவ-மாணவிகளுக்கு பணி நியமனம் செய்யாமல் ஏமாற்றி வருவதை கண்டித்தும், ெரயில்வே பொது மேலாளர் வெளியிட்ட அறிக்கையின்படி பொது மேலாளர் அதிகாரத்தினைப் பயன்படுத்தி 2017-ம் ஆண்டு வரை பயிற்சி முடித்த ஆக்ட் அப்ரண்டீஸ் மாணவர்களை பணியில் அமர்த்த ஆணையிட வேண்டும். 2009-ம் ஆண்டில் தென்னக ெரயில்வே வெளியிட்ட பணி நியமன பட்டியலில் மீதம் உள்ளவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ெரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக மக்கள் பாதுகாப்பு சங்க தலைவர் சக்கரபாணி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க பொதுச் செயலாளர் ஆனந்த் குமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அப்ரண்டீஸ் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.