கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஏலாக்குறிச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வரப்பிரசாதம் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், மாநில செயலாளர் துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அரசஞ்சேரி வாய்க்காலை தூர்வாரி பாசன வசதி ஏற்படுத்த வேண்டும். திருமானூரில் நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும். சிறு குறு விவசாயிகளுக்கு சில்லரை உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க செய்ய வேண்டும். விவசாயத்தில் உர மானியம் மற்றும் உணவு மானியத்தை குறைக்கக்கூடாது. ஏலாக்குறிச்சியில் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டும். திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டி பாசன வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story