தேசிய கல்விக்கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


தேசிய கல்விக்கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x

தேசிய கல்விக்கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரி வாயில் முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பேராசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் கிளையின் தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். செயலாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ திரும்பப்பெற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு 11.01.2021 அன்று வெளியிட்ட அரசாணை எண் 5-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story