வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
நெமிலி வட்டம் பட்டமாச்சாவடி, அரசநெல்லிகுப்பம், வாலாஜா வட்டம் கீழ்க்குப்பம், அரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நீர்ப்பிடிப்பு பகுதியில் வசித்து வரும் 47 குடும்பங்களுக்கும், நெமிலி வட்டம் தாழம்புதூர், எஸ்.கொளத்தூர், சோளிங்கர் வட்டம் மேல்வீராணம் பகுதியில் வசிக்கும் 40 குடும்பங்களை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டை சப்-கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்று, வீட்டுமனை பட்டா, இலவச தொகுப்பு வீடு, நலவாரிய அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின் இணைப்பு வசதி, மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க தமிழக அரசு சிறப்பு திட்ட செயலாக்க துறையின் உத்தரவு இருந்தும் அதிகாரிகள் வழங்காமல் இருப்பதாக குற்றம் சாட்டினர்.
Related Tags :
Next Story