முஸ்லிம் கைதிகளை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது
காரைக்குடி 5 விளக்கு அருகே சமநீதி மக்கள் கழகம், தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு, காரைக்குடி அனைத்து ஜமாத்தார்கள் இணைந்து, 25 ஆண்டு கால முஸ்லிம் சிறை கைதிகளை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சமநீதி மக்கள் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சகுபர் சாதிக் தலைமை தாங்கினார். சமநீதி மக்கள் கழகத்தின் மாவட்ட மகளிர் அணி செயலாளர் லதா கணேசன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேச மக்கள் முன்னணியின் தலைவர் பாண்டியன், தேசிய லீக் தலைவர் தடா ரஹீம், தமிழ் தேசம் கட்சி தலைவர் செல்வகுமார், வன வேங்கைகள் கட்சி தலைவர் இரணியன், சமநீதி மக்கள் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் வேங்கை சந்திரசேகரன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், எஸ்.டி.பி.ஐ. மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், தமிழர் முன்னணி பொதுச்செயலாளர் இமயம் சரவணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகரச் செயலாளர் சிவாஜி காந்தி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், பச்சை தமிழகம் கட்சியின் மாவட்டச்செயலாளர் தமிழ் கார்த்தி, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் தமிழன் ரபீக் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். முடிவில் சமநீதி மக்கள் கழகத்தின் நகரச் செயலாளர் ஞானப்பிரகாசம் நன்றி கூறினார்.