கடலூரில் அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டம்


கடலூரில் அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
x

கடலூரில் அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். 1.1.2022 முதல் முன் தேதியிட்டு அறிவித்து அகவிலைப்படி நிலுவை ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் ரேஷன் கடை, அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழுவினர் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். அரசு பணியாளர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் ஞானஜோதி, முன்னாள் பொதுச்செயலாளர் குப்புசாமி, போராட்டக்குழுவை சேர்ந்த லூயிஸ் பிரான்சிஸ், தெய்வசிகாமணி, தேவராஜ், அல்லிமுத்து, பாலமுருகன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்ககைளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் நிர்வாகி ரூபன் நன்றி கூறினார்.


Next Story