கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்

இந்திய தொழிற்சங்க மைய (சி.ஐ.டி.யு.) மாவட்ட குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், அரசு நிறுவனங்களான ரெயில்வே, மின்சாரம், போக்குவரத்து, அரசு கேபிள் டி.வி., குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு பணிகளில் 'சி' மற்றும் 'டி' பிரிவுகளில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பதில்லை என்ற அரசாணையை திரும்ப பெற வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பணப்பலன்களையும் நிபந்தனையின்றி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.


Next Story