ஊட்டியில் ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த கோரி ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி
ஊட்டி
மணிப்பூரில் கலவரம் நடந்து வருகிறது. இதனால் அங்கு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. மேலும் வழிபாட்டுத் தலங்களும் பாதிக்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு கலவரத்தை தடுத்து நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தி ஊட்டி பெந்தேகோஸ்தே போதகர் ஐக்கியம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஊட்டியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மதபோதகர் கோல்ட்ரஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் நடந்து கொண்டிருக்கிற கலவரத்தை தடுத்து நிறுத்தி, அமைதி நிலவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story