மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டில் பா.ஜ.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு மாதர் சங்கத்தினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், இந்திய மாணவர் அமைப்பினர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுசீலா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story