கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கடையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி
கடையம்:
கடையம் சின்னதேர் திடலில் ராம நதி அணை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டி கடையம் ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் காந்தியவாதி ராம் மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் கலந்து கொண்டார். முல்லை தமிழர் விடுதலை கட்சி நிறுவனர் கரும்புலி கண்ணன் கண்டன உரையாற்றினார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் கஜேந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகி கட்டி அப்துல் காதர், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ஆதித்தமிழன் அன்பழகன், பா.ஜனதா கட்சி நிர்வாகி சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி ரத்தினம், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story